< Back
தேசிய செய்திகள்
ரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது போலீசில் புகார்
தேசிய செய்திகள்

ரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது போலீசில் புகார்

தினத்தந்தி
|
21 Feb 2023 3:04 AM IST

ரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அத்துடன் ரோகிணி சிந்தூரி சம்பந்தப்பட்ட ரகசிய புகைப்படங்களை தனது முகநூலில் ரூபா வெளியிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ரோகிணி சிந்தூரி மீது 19 குற்றச்சாட்டுகளை கூறி இருந்த ரூபா மீது பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் நிலையத்தில் ரோகிணி சிந்தூரியின் கணவர் சுதீர் ரெட்டி ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டனர்.

அதாவது ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி தனது சார்பாக புகார் சம்பந்தப்பட்ட மனுவை கணவரிடம் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார். அந்த புகார் மனுவில் ரூபா, தன்னை தகாத வார்த்தையில் திட்டுவது மற்றும் அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சுதீா ரெட்டியிடம் பாகலகுண்டே போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்