< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிரான வழக்கு - அடுத்த மாதம் மீண்டும் விசாரணை
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிரான வழக்கு - அடுத்த மாதம் மீண்டும் விசாரணை

தினத்தந்தி
|
17 Aug 2023 5:14 AM IST

சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரணவ் சச்தேவ் முறையிட்டார்.

புதுடெல்லி,

ஆறு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நிலையான மணல் குவாரி மேலாண்மை வழிகாட்டுதலை கடைபிடிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து அதை விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரியும் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து, மணல் குவாரிகள் தொடர்பாக 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விரிவான வழிகாட்டுதல்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரணவ் சச்தேவ் முறையிட்டார்.

இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை அடுத்த மாதம் (செப்டம்பர்)13-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.

மேலும் செய்திகள்