< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'காந்தாரா' படம் குறித்து சர்ச்சை கருத்து: நடிகர் சேத்தன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
|10 Dec 2022 12:15 AM IST
‘காந்தாரா’ படம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகர் சேத்தன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கன்னட திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சேத்தன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், 'காந்தாரா' படம் குறித்து கருத்து ஒன்றை கூறினார். அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவக்குமார் என்பவர் சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடிகர் சேத்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே தன் மீதான விசாரணையை ரத்து செய்ய கோரி நடிகர் சேத்தன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, நடிகர் சேத்தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறியதுடன் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.