< Back
தேசிய செய்திகள்
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீதான வழக்கு - அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீதான வழக்கு - அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

தினத்தந்தி
|
2 Dec 2023 2:47 PM IST

மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான விநியோக கொள்கையில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் முன்னாள் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சஞ்சய் சிங் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்