< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரப்பிரதேசம்: தவறான தகவல்களைப் பதிவேற்றிய யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு
|25 July 2022 1:13 AM IST
உத்தரப்பிரதேசத்தில் தவறான தகவல்களைப் பதிவேற்றிய 5 யூடியூப் சேனல்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சஹாரன்பூர்,
உத்தரப்பிரதேசத்தில் தவறான தகவல்களைப் பதிவேற்றிய 5 யூடியூப் சேனல்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோவைப் பதிவேற்றி இந்த ஆண்டு நடந்தது என்று காட்டியதற்காக 5 யூடியூப் சேனல்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சூரஜ் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்றும், அவற்றை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தி சஹாரன்பூர் போலீசார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.