< Back
தேசிய செய்திகள்
கார்கள் மோதல்; பெங்களூரு வாலிபர் சாவு
தேசிய செய்திகள்

கார்கள் மோதல்; பெங்களூரு வாலிபர் சாவு

தினத்தந்தி
|
18 Oct 2022 12:15 AM IST

மூடிகெரே அருகே கார்கள் மோதி கொண்ட விபத்தில் பெங்களூருவை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.

சிக்கமகளூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தாலுகா உஜ்ரேவில் இருந்து கார் ஒன்று சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிர்திசையில் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு மற்ெறாரு கார் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் அந்த கார்கள் சாலமரம் எனும் கிராமத்தின் அருகே வந்தகொண்டிருந்தது. அப்போது திடீரென 2 கார்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த மோதலில் 2 கார்களின் முன்பகுதி அப்பளம்போல் ெநாறுங்கியது. இதில் ஒரு காாில் இருந்த பெங்களூருவை சேர்ந்த ரவி (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காரில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மூடிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மூடிெகரே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்