< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சரக்கு வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்
|16 Nov 2022 10:24 PM IST
இரியூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிக்கமகளூரு:-
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகாவை சேர்ந்த கூலி தொழிலாளிகள் சிலர் வேலைக்கு சென்றுவிட்டு சரக்கு வேன் ஒன்றில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். இரியூர் தாலுகா துக்கனஹட்டி பகுதியில் சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சரக்கு வேன் தறிகெட்டு ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சரக்கு வேனில் பயணித்து வந்த 16 பேர் பலத்த காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து இரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.