< Back
தேசிய செய்திகள்
நாகாலாந்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து - 8 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

நாகாலாந்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து - 8 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
21 Sept 2023 3:54 AM IST

சரக்கு லாரி மோதியதில் நிலைதடுமாறிய கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

கோஹிமா,

நாகாலாந்து மாநிலத்தின் மொகோக்சுங் நகரில் இருந்து தலைநகர் கோஹிமா நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் 8 பேர் இருந்தனர். இந்த கார் நேற்று அதிகாலை செமினியு மாவட்டத்தில் உள்ள கே ஸ்டேசன் கிராமத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று கார் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் விபத்தில் பலியானவர்களில் 3 பேர் பெண்கள் என்பதும், அவர்கள் சமீபத்தில் நாகாலாந்து பணியாளர் தேர்வாணையம் தேர்வில் தேர்ச்சி பெற்று, கிரேடு-3 பணியாளர்களாக அரசு பணியில் சேருவதற்கான நியமன கடிதங்களை பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்