< Back
தேசிய செய்திகள்
கால்வாய்க்குள் கார் பாய்ந்தது - கர்ப்பிணி உள்பட 5 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

கால்வாய்க்குள் கார் பாய்ந்தது - கர்ப்பிணி உள்பட 5 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
25 July 2023 6:12 AM IST

உத்தரபிரதேசத்தில் கால்வாய்க்குள் கார் பாய்ந்ததில் கர்ப்பிணி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் எட்டா பகுதியை சேர்ந்தவர் நீரஜ்(வயது 35). இவரது மனைவி வினிதா(25). நிறைமாக கர்ப்பிணியான வினிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை ஒரு காரில் ஏற்றி அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 2 உறவினர்களும் உடன் சென்றனர். காரை டிரைவர் சிவம் குமார் ஓட்டினார்.

சாலையில் வேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த கல்வாய்க்குள் பாய்ந்தது. இதில் காரில் இருந்த கர்ப்பிணி வினிதா உள்பட 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்