< Back
தேசிய செய்திகள்
ஆட்டோ மீது கார் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு !
தேசிய செய்திகள்

ஆட்டோ மீது கார் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு !

தினத்தந்தி
|
29 March 2023 5:54 AM IST

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேசம் அருகே லக்னோ-கார்தோய் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சாலையில் அந்த ஆட்டோ கவிழ்ந்து அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்