< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார்-பஸ் மோதல்; 4 பேர் பலி
|31 Jan 2023 11:18 AM IST
மராட்டியத்தில் நெடுஞ்சாலையில் கார் மற்றும் பஸ் மோதி கொண்டதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
மும்பை,
குஜராத்தில் இருந்து மராட்டியத்தின் மும்பை நகர் நோக்கி கார் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில், மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் தஹானு பகுதியில் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்து உள்ளது.
கார், அதிகாலை 4 மணியளவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது. இதில், எதிர்திசையில் வந்த சொகுசு பஸ் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது.
இந்த சம்பவத்தில் அந்த இடத்திலேயே 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.