< Back
தேசிய செய்திகள்
மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் கோர விபத்து; 6 பேர் பலி
தேசிய செய்திகள்

மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் கோர விபத்து; 6 பேர் பலி

தினத்தந்தி
|
29 Jun 2024 10:31 AM IST

மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை - நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது.

இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பிவிட்டு கார் நெடுஞ்சாலையின் எதிர்திசையில் சென்றுள்ளது. அப்போது அதேசாலையில் வேகமாக வந்த கார் எதிரே வந்த கார் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்