< Back
தேசிய செய்திகள்
நகரை அழகுபடுத்த வைத்த பூந்தொட்டியில் கஞ்சா செடி - பொதுமக்கள் அதிர்ச்சி
தேசிய செய்திகள்

நகரை அழகுபடுத்த வைத்த பூந்தொட்டியில் கஞ்சா செடி - பொதுமக்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
22 May 2024 2:29 AM IST

நகராட்சி அதிகாரிகள், கலால் துறையினர் விரைந்து வந்து கஞ்சா செடி இருந்த பூந்தொட்டியை பறிமுதல் செய்தனர்.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு நகராட்சி சார்பில், நகரில் உள்ள முக்கிய சாலைகளை அழகுப்படுத்தும் வகையில் சாலையோரம் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நகராட்சி பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அங்குள்ள ஒரு பூந்தொட்டியில் கஞ்சா இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் நகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நகராட்சி அதிகாரிகள், கலால் துறையினர் விரைந்து வந்து கஞ்சா செடி இருந்த பூந்தொட்டியை பறிமுதல் செய்தனர். 25 செ.மீ. உயரம் உள்ள கஞ்சா செடி எப்படி இங்கு வந்தது, அதன் பின்னால் செயல்பட்டது யார்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்