< Back
தேசிய செய்திகள்
காவல்துறை பணியாளர்களுடன் சேர்ந்து யோகா செய்த நாய்..! வைரலாகும் வீடியோ..!
தேசிய செய்திகள்

காவல்துறை பணியாளர்களுடன் சேர்ந்து யோகா செய்த நாய்..! வைரலாகும் வீடியோ..!

தினத்தந்தி
|
21 Jun 2023 2:46 PM IST

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை நாய் ஒன்று யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜம்மு,

சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள மக்கள், யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள பிரானு முகாமில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP) பிரிவைச் சேர்ந்த நாய் ஒன்று, ஐடிபி பணியாளர்களுடன் சேர்ந்து யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், காவல்துறை நாய், தரையில் அங்கும் இங்கும் உருண்டு தனது முதுகை உயர்த்தியும் யோகா செய்கிறது. இந்த நாயின் வீடியோவைப் பார்த்த மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்