< Back
தேசிய செய்திகள்
கரும்பு விவசாயி சின்னம்- சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
தேசிய செய்திகள்

'கரும்பு விவசாயி சின்னம்'- சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

தினத்தந்தி
|
14 March 2024 1:49 AM IST

கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. ஆனால் அந்த சின்னம் மற்றொரு கட்சிக்கு அளித்துவிட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து தனது கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.

மேலும் செய்திகள்