சொந்த வீட்டையே பாதுகாக்க முடியாத அரக ஞானேந்திராவால் கர்நாடகத்தை பாதுகாக்க முடியுமா?; காங்கிரஸ் கேள்வி
|சொந்த வீட்டையே பாதுகாக்க முடியாத அரக ஞானேந்திராவால் கர்நாடகத்தை பாதுகாக்க முடியுமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
பெங்களூரு:
தட்சிண கன்னடாவில் பா.ஜனதா பிரமுகர் கொலையை கண்டித்து பெங்களூரு ஜெயமகாலில் உள்ள போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டை முற்றுகையிட்டு ஏ.பி.வி.பி. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடா்பாக கர்நாடக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தட்சிண கன்னடாவில் நடந்த பா.ஜனதா பிரமுகர் கொலையை கண்டித்தும், எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போலீஸ் பாதுகாப்பை மீறி வீட்டுக்குள்ளே நுழைந்துள்ளனர். சொந்த வீட்டையே பாதுகாக்க முடியாத அரக ஞானேந்திராவால் கர்நாடகத்தை பாதுகாக்க முடியுமா?. மாநிலத்தில் வசிக்கும் அப்பாவி மக்களை பாதுகாக்க சாத்தியமா?. இதற்கு மேலும் போலீஸ் மந்திரி பதவியில் அரக ஞானேந்திரா நீடிக்க கூடாது.
இவ்வாறு காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.