< Back
தேசிய செய்திகள்
டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
2 July 2024 2:03 PM IST

போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்ட கேமரூன் நாட்டை சேர்ந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் நடத்திய சோதனையின்போது, கேமரூன் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் போதைப்பொருட்களை மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரின் உடைமைகளை சோதனையிட்ட அதிகாரிகள், 1,472.5 கிராம் எடை கொண்ட கொக்கென் போதைப்பொருளை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் 22 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்