< Back
தேசிய செய்திகள்
சுற்றுலா விசாவில் வங்காளதேசத்தில் இருந்து அசாம் வந்து ரகசிய மதபோதனை; 17 பேர் கைது
தேசிய செய்திகள்

சுற்றுலா விசாவில் வங்காளதேசத்தில் இருந்து அசாம் வந்து ரகசிய மதபோதனை; 17 பேர் கைது

தினத்தந்தி
|
17 Sept 2022 9:00 PM IST

சுற்றுலா விசாவில் அசாமுக்கு வந்து ரகசிய மதபோதனையில் ஈடுபட்ட வங்காளதேச நாட்டை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கவுகாத்தி,


வங்காளதேச நாட்டை சேர்ந்த சிலர் சுற்றுலா விசாவில் கூச் பெஹார் வழியே அசாம் மாநிலத்திற்கு வந்து உள்ளனர். இந்தியாவிற்குள் வந்த பின்னர், மதம் சார்ந்த பல பகுதிகளுக்கு அவர்கள் பயணித்து உள்ளனர்.

இதில் டெல்லி, அஜ்மீர் ஷெரீப் உள்ளிட்ட பல பகுதிகளில் மத கூட்டங்களை நடத்தியுள்ளனர். தவிர, ரகசிய மதபோதனையிலும் கூட அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த 13-ந்தேதி பிஸ்வநாத் மாவட்டத்தின் பெஹாலி பகுதியில் அவர்கள் முகாமிட்டு உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஜிங்கியா பகுதி காவல் துறையினர் வங்காளதேச நாட்டை சேர்ந்த 17 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது வெளிநாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என எஸ்.பி. நவீன் சிங் கூறியுள்ளார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்