< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி..!

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி..!

தினத்தந்தி
|
13 July 2023 1:28 AM IST

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 8-ந் தேதி நடந்தது. அதில், வேட்புமனு தாக்கலில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகவும், நேர்மையான தேர்தலை உறுதி செய்வதற்கான அரசியல் சட்ட அடிப்படை கொள்கைகள் பின்பற்றப்படவில்லை என்றும் கொல்கத்தா ஐகோர்ட்டில் 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த காரணத்தால், தேர்தலை செல்லாது என்று அறிவிக்குமாறு மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இம்மனுக்கள், தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மாநில தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தனர்.

மேலும் செய்திகள்