ஷாப்பிங் செல்கிறீர்களா? உங்கள் கணவரை எங்களிடம் விட்டுவிட்டு போங்க.! ஆனந்த் மகிந்திராவை கவர்ந்த விளம்பரம்
|தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சேவைகளை வழங்க முடியும் என்பதற்கு தி ஹஸ்பண்ட் டே கேர் சென்டர் ஒரு சிறந்த உதாரணம் என்பதை மஹிகிந்திரா குழுமத்தின் தலைவர் கூறி உள்ளார்.
மும்பை
சாதாரணமாக வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர்.
அதுபோல் ஷாப்பிங் மற்றும் வெளியில் செல்லும் மனைவிகளுக்காக கணவர்களை பராமரிக்கும் மையம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது
அத்தகைய கணவர் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவே இந்த பதிவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். பகிர்ந்தது மட்டும் அல்லாமல் இந்த புதுமையான முயற்சியை மிகவும் பாராட்டியும் உள்ளார்.
டென்மார்க்கில் உள்ள ஒரு கபே கணவர் பராமரிப்பு மையம் என்ற ஒன்ரை தொடங்கு அதுகுறித்து உங்கள் கணவரை எங்களிடம் விட்டுவிட்டு போங்க ! என்ற விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது. அந்த விளம்பரத்தில்
"உங்களுக்கு நேரம் தேவையா? ஓய்வெடுக்க நேரம் வேண்டுமா? ஷாப்பிங் செல்ல வேண்டுமா? உன் கணவனை எங்களிடம் விட்டுவிட்டு போங்க ! உங்களுக்காக நாங்கள் அவரை கவனித்துக்கொள்கிறோம்! நீங்கள் அவருடைய பானங்களுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் என கூறி உள்ளது.
இதனை உன் கணவனை எங்களிடம் விட்டுவிட்டு போங்க ! ஆனந்த் மகிந்திராவைக் கவர்ந்து உள்ளது. இந்த புதிய முயற்சிக்கு அவர் தனது டுவிட்டரில் பாராட்டை வெளிப்படுத்தி உள்ளார்.
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சேவைகளை வழங்க முடியும் என்பதற்கு தி ஹஸ்பண்ட் டே கேர் சென்டர் ஒரு சிறந்த உதாரணம் என்பதை மஹிகிந்திரா குழுமத்தின் தலைவர் கூறி உள்ளார்.