< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் ரூ. 3 ஆயிரத்து 300 கோடியில் செமிகண்டக்டர் ஆலை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
தேசிய செய்திகள்

குஜராத்தில் ரூ. 3 ஆயிரத்து 300 கோடியில் செமிகண்டக்டர் ஆலை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

தினத்தந்தி
|
2 Sept 2024 8:07 PM IST

குஜராத்தில் ரூ. 3 ஆயிரத்து 300 கோடியில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி,

சிலிக்கானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செமிகண்டக்டர்களை கொண்டு மின்சாதனங்கள், இயந்திரங்கள், வாகனங்களுக்கு தேவைப்படும் சிப்கள் (Chip) தயாரிக்கப்படுகின்றன. இந்த சிப்கள் செல்போன்கள், லேப்டாப்கள் என அன்றாட பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இந்த சிப் தொழில்நுட்பத்தாலேயே இயங்குகின்றன.

தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து வரும் நிலையில் செமிகண்டக்டர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் செமிகண்டக்டர்கள் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குஜராத்தின் சனந்த் நகரில் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட கெனெஸ் நிறுவனம் குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்