< Back
தேசிய செய்திகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு  4% அகவிலைப்படி உயர்வு
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

தினத்தந்தி
|
18 Oct 2023 3:53 PM IST

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதனால் 48.67 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46% ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்