< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவின் வீட்டின் மீது மோதிய கார்..!
|25 Aug 2023 12:35 AM IST
டெல்லியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவின் வீட்டின் மீது கார் மோதியது.
புதுடெல்லி,
மத்திய புவி அறிவியல் மந்திரி கிரண் ரிஜிஜுவின் அதிகாரப்பூர்வ இல்லம் மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ளது.
நேற்று காலை கிரண் ரிஜிஜூவின் வீட்டுக்கு அருகில் உள்ள சாலையில் வாடகை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பஸ் திடீரென கார் மீது மோதியது.
இதனால் நிலை தடுமாறிய கார் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவின் வீட்டின் சுவர் மீது மோதியது. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.