< Back
தேசிய செய்திகள்
ஜார்க்கண்ட் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு...!
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு...!

தினத்தந்தி
|
18 Feb 2023 2:39 PM IST

ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.

ராஞ்சி,

தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். மேலும், அவர் கவர்னராக பொறுப்பேற்க ஜார்க்கண்ட் சென்றார்.

இந்நிலையில், ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஹெமந்த் சோரன், அமைச்சரவை மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்