< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலுக்கு ஏற்பாடு
|8 Jun 2023 8:57 AM IST
ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது.
கோழிக்கோடு,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான கோழிக்கோடு துணை கலெக்டர் கடிதம் அனுப்பி உள்ளார்.