< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஐதராபாத்தில் தொழிலதிபரை கடத்தி ரூ.30 லட்சம் பறித்த கும்பல் - மைத்துனரே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது அம்பலம்
|9 Feb 2023 3:37 PM IST
தொழிலதிபரின் மைத்துனரே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், முரளிகிருஷ்ணா என்ற தொழிலதிபரை வருமான வரித்துறையினர் எனக் கூறி 7 பேர் கொண்ட கும்பல் கடந்த மாதம் 27-ந்தேதி கடத்திச் சென்றுள்ளது. மேலும் அவரை மிரட்டி அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முரளிகிருஷ்ணா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், முரளிகிஷ்ணாவின் மைத்துனர் ராஜேஷ் என்பவரே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது அம்பலமானது.
இதையடுத்து ராஜேஷ் உள்பட கடத்தல் கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.