< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஸ் மீது லாரி மோதி கோர விபத்து - 6 பேர் பலி
|20 Sept 2024 1:42 PM IST
மராட்டியத்தில் பஸ் மீது லாரி மோதிய சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் கிவ்ராய் நகரில் இருந்து ஜல்னா நோக்கி இன்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
ஷஹாபூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் பழங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, பஸ் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.