< Back
தேசிய செய்திகள்
ஆட்டோ மீது பஸ் மோதல்: 2 ராணுவ வீரர்கள் பலி; 7 பேர் காயம்
தேசிய செய்திகள்

ஆட்டோ மீது பஸ் மோதல்: 2 ராணுவ வீரர்கள் பலி; 7 பேர் காயம்

தினத்தந்தி
|
17 Jun 2024 2:23 AM IST

மராட்டியத்தில் தனியார் பஸ் ஒன்று ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில், ராணுவ வீரர்கள் 2 பேர் பலியானார்கள்.

நாக்பூர்,

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் தனியார் பஸ் ஒன்று விரைவாக சென்று கொண்டிருந்தது. அப்போது, கன்ஹான் ஆற்று பாலத்தில் சென்றபோது, ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 6 ராணுவ வீரர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் என 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்