< Back
தேசிய செய்திகள்
மும்பை-புனே விரைவுச் சாலையில் டயர் வெடித்து தீப்பிடித்த பேருந்து - பயணிகள் உயிர் தப்பினர்
தேசிய செய்திகள்

மும்பை-புனே விரைவுச் சாலையில் டயர் வெடித்து தீப்பிடித்த பேருந்து - பயணிகள் உயிர் தப்பினர்

தினத்தந்தி
|
27 April 2024 3:59 PM IST

பேருந்தில் இருந்த 35 பயணிகளும் சரியான நேரத்தில் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை-புனே விரைவுச் சாலையில் தனியார் பேருந்து ஒன்று 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு புனே நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று காலை 7 மணிக்கு மாவல் தாலுகாவில் உள்ள ஆதே கிராம் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் டயர் வெடித்தது.

இதைத்தொடர்ந்து பேருந்தில் தீப்பிடிக்கத் தொடங்கியது. இதனால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினர். பின்னர் சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பேருந்தின் பெரும் பகுதி எரிந்து நாசமானது.

பேருந்தில் இருந்த 35 பயணிகளும் சரியான நேரத்தில் வெளியேறியதால், இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மும்பை-புனே விரைவுச் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்