குஜராத்தில் பஸ் மற்றும் கார் மோதல்; 9 பேர் பலி
|குஜராத்தில் நெடுஞ்சாலையில் பஸ் மற்றும் கார் மோதி கொண்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நவ்சாரி,
குஜராத்தின் நவ்சாரி பகுதியில் ஆமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் மற்றும் கார் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது. பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்து உள்ளது. விபத்தில் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார்.
விபத்து நடந்தவுடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி நவ்சாரி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரெண்டு வி.என். பட்டேல் கூறும்போது, விபத்தில் பஸ் மற்றும் கார் சிக்கி கொண்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். பலத்த காயமடைந்த நபர் சூரத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் என கூறியுள்ளார்.
இந்த விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.