< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை - அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
16 Aug 2024 9:06 AM IST

காங்கிரஸ் எம்.ஏல்.ஏ. வீட்டில் 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ரகோகர்க் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெய்வர்தன் சிங். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயசிங்கின் மகன் ஆவார். ஜெய்வர்தன் சிங் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக செயல்பட்டுள்ளார்.

தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநில எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஷர் இம்லி பகுதியில் ஜெய்வர்தன் சிங்கிற்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் நேற்று கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் லாக்கரை உடைத்து அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்லையடித்து சென்றது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்