< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பாஜக மகளிரணி செய்தித்தொடர்பாளர் வீட்டில் கொள்ளை - அதிர்ச்சி சம்பவம்
|10 July 2024 4:11 AM IST
பாஜக மகளிரணி செய்தித்தொடர்பாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் பலம்பு மாவட்டம் மதினிநகரை சேந்தவர் லவ்லி குப்தா. இவர் பலம்பு மாவட்ட பாஜக மகளிரணி செய்தித்தொடர்பாளராக உள்ளார்.
இந்நிலையில், லவ்லி தனது குடும்பத்துடன் கடந்த ஞாயிற்றுகிழமை ராஞ்சி சென்றுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் லவ்லி வீட்டிற்குள் புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
வீட்டில் இருந்த 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, 1 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.