< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் மாட்டு வண்டி பந்தயத்தில் வெடித்த கலவரம்; துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு - 3 பேர் கைது
|15 Nov 2022 9:44 PM IST
மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கியால் 15 ரவுண்டுகளுக்கு மேல் சுட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் அம்பர்நாத் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தின் போது அங்குள்ள இரு குழுக்களிடையே மோதல் வெடித்த நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கியால் 15 ரவுண்டுகளுக்கு மேல் சுட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், கலவரத்தில் துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். மேலும் துப்பாக்கி வைத்திருந்தது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.