< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தண்டவாளத்தின் மோசமான நிலை: 'வந்தேபாரத்' ரெயில்கள் மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் ஓட்டம் - ரெயில்வே
|18 April 2023 1:58 AM IST
தண்டவாளத்தின் மோசமான நிலையால் ‘வந்தேபாரத்’ ரெயில்கள் மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், வந்தே பாரத் ரெயில்களின் வேகம் குறித்து ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ரெயில்வே அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது:-
வந்தே பாரத் ரெயில்கள், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டவை. அவற்றின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம், மணிக்கு 130 கி.மீ. ஆகும்.
இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக வந்தே பாரத் ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. ஆக உள்ளது. இதற்கு தண்டவாளத்தின் மோசமான நிலைதான் காரணம். டெல்லி-வாரணாசி வந்தே பாரத் ரெயில் மட்டும் 95 கி.மீ. சராசரி வேகத்தை எட்டியது என்று அவர்கள் கூறியுள்ளனர்.