< Back
தேசிய செய்திகள்
கர்நாடக வளர்ச்சி பயண தலைமைத்துவத்திற்கான இளைஞர் அணியை உருவாக்கி வருகிறோம்: பிரதமர் மோடி பேச்சு
தேசிய செய்திகள்

கர்நாடக வளர்ச்சி பயண தலைமைத்துவத்திற்கான இளைஞர் அணியை உருவாக்கி வருகிறோம்: பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
27 April 2023 2:28 PM IST

அடுத்த 25 ஆண்டுகளில் கர்நாடகாவின் வளர்ச்சி பயணத்திற்கான தலைமைத்துவத்திற்கான இளைஞர் அணியை பா.ஜ.க. உருவாக்கி வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி பா.ஜ.க. தொண்டர்களிடையே காணொலி காட்சி வழியே பேசினார். அப்போது அவர், பா.ஜ.க.வுக்கும், பிற கட்சிகளுக்கும் இடையேயான அணுகுமுறைக்கான பெரிய வேற்றுமையை பற்றி குறிப்பிட்டார்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான வழிகாட்டி வரைபடம் உருவாக்கும் பணியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. நமது எதிரிகளின் செயல் திட்டம் ஆனது, ஆட்சியை பிடிக்க வேண்டும்.

நமது செயல் திட்டம் ஆனது, 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்குவது மற்றும் வறுமையில் இருந்து விடுபட செய்வது மற்றும் இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பது ஆகும்.

அடுத்த 25 ஆண்டுகளில், கர்நாடகா வளர்ச்சி அடைவதற்கான பயணத்திற்கான தலைமைத்துவம் வழங்குவதற்காக, மாநிலத்தில் ஓர் இளைஞர் அணியை பா.ஜ.க. உருவாக்கி கொண்டிருக்கிறது. பெங்களூருவை போல் கர்நாடகாவில் எண்ணற்ற சர்வதேச மையங்களை உருவாக்க வேண்டியது நமது முயற்சியாகும் என்று பேசியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 224 வேட்பாளர்களில் இந்த முறை 50-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பை பா.ஜ.க. வழங்கி இருக்கிறது.

இதனால், கட்சியின் மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டார், லட்சுமண் சவாதி உள்ளிட்ட் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து விலகி சீட் பெற காங்கிரசில் இணைந்து விட்டனர்.

மேலும் செய்திகள்