< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
மராட்டிய மாநிலத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - 10 பேர் சிக்கியிருப்பதாக தகவல்

29 April 2023 2:37 PM IST
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
மும்பை,
மராட்டிய மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் 10 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.