< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டிரெண்டிங்காகும் BSRO: அது என்ன..?
|5 Sept 2023 4:53 PM IST
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உட்பட அனைத்திலும் இந்தியா என்பது பாரத் என மாற்றப்பட்டால் எப்படியிருக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
சமூகவலைதளங்களில் அவ்வப்போது சில விஷயங்கள் டிரெண்டிங் ஆகும் அந்த வகையில் சமீபத்தில் இணையதளத்தில் டிரெண்டிங்காகும் விஷயம் BSRO.
இந்தியா என்ற பெயர், பாரத் என மாற்றப்படலாம் என பரவும் தகவல் வெளியாகி உள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உட்பட அனைத்திலும் இந்தியா என்பது பாரத் என மாற்றப்பட்டால் எப்படியிருக்கும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதுபோல இஸ்ரோவுக்கு பதில் BSRO என்ற கற்பனைப் பெயர் ஏக்ஸ் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.