< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்
தேசிய செய்திகள்

பஞ்சாப் எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
3 May 2024 11:38 PM IST

டிரோன்களில் அனுப்பப்பட்ட சுமார் 15 கிலோ போதைப்பொருளையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

சண்டிகர்,

பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வீசப்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 20 டிரோன்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

டிரோன்களில் அனுப்பப்பட்ட சுமார் 15 கிலோ போதைப்பொருள் மற்றும் 3 துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 2 பாகிஸ்தானியர்கள் உள்பட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.1.10 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்