< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை வழியாக நடைபெற இருந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை வழியாக நடைபெற இருந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

தினத்தந்தி
|
25 Aug 2022 9:03 AM IST

பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக கடத்த முயன்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது.

ஸ்ரீநகர்,

இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக சதிகாரர்கள் மேற்கொள்ள முயன்ற கடத்தல் முயற்சியை ஜம்மு எல்லை காவல் படையினர் முறியடித்தனர்.

இன்று அதிகாலை இந்திய சம்பா பகுதி எல்லை வழியாக, கடத்த முயன்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சுமார் 8 கிலோ போதைப்பொருள் ஹெராயின் ஆக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தல் முயற்சியில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு பாகிஸ்தானிய கடத்தல்காரன் பாதுகாப்பு படை வீரர்களால் சுடப்பட்டான்.

ஆனால் அவன் மீண்டும் பாகிஸ்தான் பக்கம் ஊர்ந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. எனினும் கடத்தல்காரனின் இரத்தக் கறை அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்