< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் கொடூரம்; காதலியை கொன்று, உடலை பிரீசரில் மறைத்து வைத்த நபர்
தேசிய செய்திகள்

டெல்லியில் கொடூரம்; காதலியை கொன்று, உடலை பிரீசரில் மறைத்து வைத்த நபர்

தினத்தந்தி
|
14 Feb 2023 5:18 PM IST

டெல்லியில் காதலியை கொன்று, உடலை பிரீசரில் மறைத்து வைத்த உணவு விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.



புதுடெல்லி,


டெல்லியின் நஜாப்கார் நகரில் மித்ராவன் கிராமப்புறத்தில் சாலையோர பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்து உள்ளது.

இதில் உள்ள பிரீசரில், 25 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

துவாரகா நகர கூடுதல் காவல் துணை ஆய்வாளர் விக்ரம் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, மித்ராவன் கிராமத்தில் வசிக்கும் உணவு விடுதி உரிமையாளரான சாஹில் கெலாட் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து உள்ளோம்.

தொடக்க விசாரணையில், இந்த பெண்ணுடன் சாஹில் உறவில் இருந்து வந்து உள்ளார். இந்நிலையில், மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண் அவரிடம் சென்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் பெண்ணை கொலை செய்து உடலை பிரீசரில் மறைத்து வைத்து, அதனை உணவு விடுதியில் வைத்து உள்ளார். சம்பவம் 2 முதல் 3 நாட்களுக்குள் நடந்திருக்க கூடும் என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண், அவரது காதலரான அப்தாப் என்பவரால் கொலை செய்யப்பட்டு, 35-க்கும் மேற்பட்ட துண்டுகளாக ஆக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்