அடிக்கடி செல்போனில் பேச்சு அண்ணியின் நடத்தையில் சந்தேகம்: கொலை செய்த மைத்துனர் கைது
|அடிக்கடி செல் போனில் பேசுவதை பார்த்த அபிஷேக் ஆத்திரம் கொண்டார். அவரது நடத்தையை சந்தேகிக்க பட ஆரம்பித்தார்.
மீரட் ,
மீரட் மாவட்டத்தின் ஜானி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியின் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரவ். (வயது 25 ) இவர் ட்விங்கிளை 2017-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன . இந்த நிலையில் கணவர் 2021 -ம் ஆண்டு எதிர்பாராத விதமாக லாரி விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் .அவருக்கு அபிஷேக் என்னும் தம்பி உள்ளார் .
மேலும் கணவர் மறைவுக்கு பின்னர் அண்ணியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி செல் போனில் பேசுவதை பார்த்த அபிஷேக் ஆத்திரம் கொண்டார். அவரது நடத்தையை சந்தேகிக்க பட ஆரம்பித்தார். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு முதல் மாடியில் உள்ள அண்ணியின் அறைக்கு சென்றார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அண்ணியை சுத்தியலால் கண்மூடித்தனமாக தலை மற்றும் உடலை பல இடங்களில் வெட்டியும் உள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். நடத்தையில் சந்தேகம் காரணமாக. இசம்பவத்தில் அபிஷேக் கைது செய்யப்படுள்ளார் .
இது குறித்து போலீசார் கூறுகையில்,
நடத்தையில் சந்தேகத்தின் பேரில் 25 வயது மதிக்கத்த பெண்ணை கொன்றுள்ளார். ட்விங்கிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் வீட்டில் இருந்து ஒரு சுத்தியல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.ட்விங்கிளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.