< Back
தேசிய செய்திகள்
பீகாரில் செங்கல் சூளையில் வெடிவிபத்து; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

பீகாரில் செங்கல் சூளையில் வெடிவிபத்து; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
24 Dec 2022 7:43 AM IST

பீகாரில் செங்கல் சூளையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.



மோதிஹரி,

பீகாரின் மோதிஹரி நகரில் நாரிர்கீர் பகுதியில் ராம்கார்வா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், செங்கல் சூளையின் புகைக்கூண்டில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் குழு மற்றும் மாநில பேரிடம் மீட்பு படையினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும், வெடிவிபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்