< Back
தேசிய செய்திகள்
ஒடிசாவில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான டெண்டர்களைப் பெற லஞ்சம்; அரசு அதிகாரி உள்பட 7 பேர் கைது
தேசிய செய்திகள்

ஒடிசாவில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான டெண்டர்களைப் பெற லஞ்சம்; அரசு அதிகாரி உள்பட 7 பேர் கைது

தினத்தந்தி
|
18 Sept 2023 5:38 AM IST

முறைகேடு தொடர்பாக அரசு பொதுத்துறை நிறுவன அதிகாரி உள்பட 7 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

புவனேஸ்வர்,

குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிபர் ஹேதல் குமார் ராஜகுரு. இவர் மத்திய அரசின் ஏகலைவா மாதிரி பள்ளி கட்டிடங்களை ஒடிசாவில்கட்டுவதற்கான அரசின் டெண்டர்களை பெற லஞ்சம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசின் பொதுத்துறை நிறுவனமான பிரிட்ஜ் அன்ட் ரூப் கட்டுமான கம்பெனி நிர்வாக இயக்குனரின் தனிச்செயலாளருக்கு ரூ.20 லட்சம்வரை லஞ்சமாக கொடுத்து பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான டெண்டர்களை முறைகேடாக பெற்றது தெரியவந்தது.

அப்போது முக்கிய ஆவணங்கள், ஹாவாலா பணபரிமாற்ற குறிப்புகள் ஆகியவை சிக்கின. இந்த நிலையில் ராஜகுரு, அரசு பொதுத்துறை நிறுவன அதிகாரி உள்பட 7 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் மேல்விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்