< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மனிதாபிமான அணுகுமுறையுடன் குறைகளுக்கு தீர்வு காணுங்கள்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
|20 Feb 2023 2:18 AM IST
மனிதாபிமான அணுகுமுறையுடன் குறைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்தார்.
புதுடெல்லி,
மத்திய பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு சிந்தனை முகாம் நடத்தப்பட்டது. மத்திய பணியாளர் நல அமைச்சகத்தால் நடத்தப்பட்ட இந்த முகாமில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பொதுமக்களின் குறைகளுக்கு உறுதியான தீர்வு காண்பதுதான் ஜனநாயகத்தின் உண்மையான வலிமை. ஒரு வலிமையான ஜனநாயகத்தை கட்டி எழுப்ப மக்கள் குறைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காண்பது முக்கியம். இது நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கு அவசியம்.
ஆகவே, தடைகளை முறியடிக்க வேண்டும். கூட்டு மனப்பான்மையுடன் பணியாற்றுங்கள். அதிகார படிநிலையை கடந்து செயல்படுங்கள். பொதுமக்கள் குறைகளை மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்த்து வையுங்கள் என்று அவர் பேசினார்.