< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1½ லட்சம் நகை-பணம் திருட்டு
|28 Sept 2023 12:15 AM IST
பாகேபள்ளியில் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1½ லட்சம் நகை-பணத்தை மா்மநபா்கள் திருடி சென்றனா்.
பாகேபள்ளி
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா பரகோடு அருகே தேவரெட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி. விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு சென்றிருந்தார்.
அந்த சமயத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த நகை-பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
இதையடுத்து நரசிம்ம ரெட்டி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.1.40 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து நரசிம்ம ரெட்டி பாகேபள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து பாகேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.