உல்லாச வீடியோக்களை அனுப்பி பெண்களை மிரட்டிய பிரஜ்வல் ரேவண்ணா: போலீஸ் விசாரணையில் தகவல்
|சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பிரஜ்வல் ரேவண்ணா 15 சிம் கார்டுகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 4 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். 3 முறை சிறையில் அடைக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை மீண்டும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒலேநரசிப்புராவில் பதிவான வழக்கில் ஜாமீன் கேட்டு பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பிரஜ்வல் ரேவண்ணா 15 சிம் கார்டுகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்,
பிரஜ்வல் ரேவண்ணா சுமார் 15 சிம் கார்டுகளை பயன்படுத்தி உள்ளார். வேலை மற்றும் சிபாரிசு கேட்டு வரும் பெண்களை மிரட்டி அவர் பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோ, புகைப்படம் எடுத்ததுடன், அவற்றை பல்வேறு எண்களில் இருந்தும் அந்த பெண்களுக்கு அனுப்பி மிரட்டி அவர்களை மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்ததும் தெரியவந்தது. அவரிடம் கூடுதல் சிம் கார்டுகள் உள்ளனவா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.