< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: புகார் எண்கள் அறிவிப்பு
|5 May 2024 9:58 PM IST
புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிறப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு அமைப்பு புகார் எண்ணை அறிவித்துள்ளது. அதன்படி, ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க 6360938947 என்கிற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிறப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.