< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
30 ரூபாய் பிரச்சினையில் சிறுவன் கழுத்தை நெரித்து கொலை.!
|1 Oct 2023 6:12 AM IST
30 ரூபாய் பிரச்சினையில் 3 பேர் கொண்ட கும்பல், சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஹிருத்திக். இவன் அதே கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தான். இவன் 30 ரூபாய் வாங்கியது தொடர்பாக சக கிராமவாசிகள் 3 பேருடன் பிரச்சினை இருந்துவந்துள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக சிறுவன் ஹிருத்திக்குக்கும், அந்த 3 பேருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் 3 பேரும் சேர்ந்து சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.