< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
40 அடி கிணற்றில் தவறி விழும் சிறுவன் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
|21 Dec 2022 6:51 PM IST
உடனிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர், கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.
மத்திய பிரதேசம்,
மத்திய பிரதேசத்தில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் 40 அடி கிணற்றில் சிறுவன் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தாமோ மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் தரைதலமாக இருந்த கிணறு சரியாக மூடாததால், அதில் சிறுவன் தவறி விழுந்தான். உடனிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர், கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.