< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
10 கிலோ ஹெராயின், துப்பாக்கிகளுடன் எல்லைக்குள் ஊடுருவிய 3 டிரோன்கள்
|29 March 2023 1:48 AM IST
பஞ்சாபில் 3 டிரோன்களில் இருந்து 10 கிலோ ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கிகளை எல்லைப் படை மீட்டுள்ளது.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு செல்கிறது. இதனை டிரோன் வழியாக கடந்து போதைபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவை இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படுவது தொடர் வாடிக்கையாக இருக்கிறது.
அமிர்தசரஸ், பாசில்கா பகுதி எல்லைகோட்டினை கடந்து போதைப்பொருளுடன் 3 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. ஆனால் எல்லை பாதுகாப்பு வீரர்களால் அவை சுட்டு வீழ்த்தப்பட்டன.
இதனால் நாசக்காரர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. வீரர்களின் சாமர்த்திய நடவடிக்கை காரணமாக 10 கிலோ ஹெராயின், 2 கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.